டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? எங்கே எல்லாம் இதை பயன்படுத்தலாம்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

 டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன? எங்கே எல்லாம் இதை பயன்படுத்தலாம்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? 

கடந்த பிப்ரவரியில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த நவம்பர் 1 அன்று இந்திய ரிசர்வ் வங்கி நாடு முழுவதும் சோதனை முறையில் டிஜிட்டல் நாணயங்களை மொத்த விற்பனையில் அறிமுகப்படுத்தியது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்த நிலையில், கடந்த டிசம்பர் 1ஆம் தேதி சில்லறை வர்த்தகத்திலும் இது அறிமுகமாகி உள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, யெஸ் வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி ஆகிய 8 வங்கிகள் மூலம் டிஜிட்டல் நாணயம் அறிமுகம் செய்யப்படுகிறது. முதற்கட்டமாக இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் ஆகிய 4 நகரங்களில் மட்டும் இந்த சோதனை தொடங்கப்பட்டுள்ளது. இது மெல்ல நாடு முழுக்க வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இந்த டிஜிட்டல் ரூபாய் என்றால் என்ன?  எங்கே எல்லாம் இதை பயன்படுத்தலாம்? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? என்ற சந்தேகமும் பலருக்கும் உள்ளது.
ரூபாய், 20 ரூபாய், 10 ரூபாய் என பல்வேறு மதிப்புகளை கொண்ட டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிட்டு, தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள வங்கிகளுக்கு அளித்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங், கடைகளில் ஷாப்பிங் செய்யும்போது பணத்திற்கு பதிலாக டிஜிட்டல் ரூபாயை செலுத்திக் கொள்ள முடியும்.

டிஜிட்டல் ரூபாய் மூலம் பண பரிவர்த்தனைக்கான செலவுகள் குறையும் என கருதப்படுகிறது. அத்துடன் வங்கிகளுக்கு டிமாண்ட் டிராப்ட் மற்றும் எலக்ட்ரானிக் ட்ரான்ஸ்பர் போன்ற பணப்பரிவர்த்தனைக்காக அளிக்கப்படும் கட்டணங்களும் குறையும் என அதிகாரிகள் கருதுகின்றனர்.