பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா

 பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாராமநாதபுரம் மாவட்ட திமுக சார்பில் இனமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக்கூட்டம் மாவட்ட கழக செயலாளரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் தலைமைக்கழகப் பேச்சாளரும்,திரைப்பட நடிகருமான வாசு விக்ரம் சிறப்புரை ஆற்றினார். இதில் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு மண்டபம் (மே) ஒன்றிய செயளாலர் K.J.பிரவின் வெள்ளி வாள் பரிசளித்தார்.  

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி