பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருமானவரித்துறை எச்சரிக்கை...!?

 பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருமானவரித்துறை எச்சரிக்கை...!?

PAN Card link: நாடு முழுவதும் முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படும் பான் கார்டு, நிதி பரிவர்த்தனை முதல் தனிநபர் அடையாளச் சான்று வரை என அனைத்திற்கும் ஆவணமாக இருக்கிறது. இதனால், பான் கார்டில் அவ்வப்போது சில அப்டேட்டுகளை செய்யுமாறு மத்திய அரசு தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறது. இதனை மக்கள் சரியாக செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை. அதனை செய்ய தவறும்போது, அரசின் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். 

இப்போதும் ஒரு அறிவிப்பை வருமானவரித்துறை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால், பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். அதற்காக காலக்கெடுவும் கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்டிருக்கும் தேதிக்குள் நீங்கள் உங்களின் பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்காவிட்டால், அது செல்லாமல் போய்விடும். அதனை ஒரு அடையாள சான்றாக நீங்கள் எங்கும் பயன்படுத்த முடியாது. இதற்காக நீங்கள் மீண்டும் பல்வேறு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியிருக்கும்.  

PAN (நிரந்தர கணக்கு எண்) என்பது இந்தியாவில் உள்ள அனைத்து வரி செலுத்துவோருக்கும் வழங்கப்படும் அடையாள எண். பான் என்பது ஒரு மின்னணு அமைப்பாகும். இதன் மூலம் தனிநபர்/நிறுவனத்திற்கான அனைத்து வரி தொடர்பான தகவல்களும் ஒரே பான் எண்ணில் பதிவு செய்யப்படும். இது தகவல்களைச் சேமிப்பதற்கான முதன்மைத் திறவுகோலாகச் பான் கார்டு செயல்படுகிறது. நாடு முழுவதும் பகிரப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பான் கார்டு தொடர்பான முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பான் கார்டுடன் ஆதார் அட்டையை கட்டாயம் இணைக்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே பலமுறை வருமானவரித்துறை அறிவுறுத்தியிருக்கும் நிலையில், இப்போது காலக்கெடு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த தேதிக்குள் நீங்கள் ஆதார் எண்ணை உங்கள் பான் கார்டில் இணைக்காவிட்டால் அது செல்லாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வருமானவரித்துறை வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், " வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, விலக்கு அளிக்கப்பட்ட பிரிவின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களும் 31.03.2023-க்கு முன் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும். 01.04.2023 முதல் ஆதாருடன் இணைக்கப்படாத பான்கள் செயலிழந்துவிடும்" என தெரிவித்துள்ளது.