தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது.-அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி

தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது.-அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி

*ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பது அதிமுகவின் நிலைப்பாடு. தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது.-அதிமுக முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி பேட்டி.*

கிருஷ்ணகிரி மாவட்டம் கெளமங்கலம் பேரூராட்சியில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான பி பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக துணை பொது செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சருமான கே பி முனுசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசின் வரி உயர்வு மின் கட்டண உயர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி,

ஒரு கட்சியில் கொள்கை பிடிப்புடன் இருப்பவர்கள் ஒரு ரகம் வாய்ப்புகளை தேடி கட்சியில் இருப்பவர்கள் இரண்டாவது ரகம் இதில் கோவை செல்வராஜ் போன்றவர்கள் இரண்டாவது ரகத்தைச் சார்ந்தவர்கள் ஏற்கனவே அவர் அதிமுகவின் ஸ்லீப்பர் செல்லாக காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்தபோது இயங்கியவர் இடையில் காணாமல் போயிருந்தார் மீண்டும் எடப்பாடி முதலமைச்சரான பொழுது வந்து ஒட்டிக்கொண்டார் தற்பொழுது அங்கு வாய்ப்பு தேடி அங்கு சென்று உள்ளார் என விமர்சனம் செய்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,. ஆன்லைன் சூதாட்டம் மசோதா குறித்து ஆளுநரின் நடவடிக்கைகள் பற்றி கேட்ட கேள்விக்கு,

பாராளுமன்றத்தில் ஆளுநரின் நடவடிக்கையை கண்டித்து திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்வது  அவர்கள் கட்சியினுடைய நிலைப்பாடு. ஏற்கனவே திமுகவினர் தமிழகத்தில் ஆளுநரின் நடவடிக்கைகளை எதிர்த்தும் வருகின்றனர். எங்களை பொறுத்தவரையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பது எங்கள் கட்சியின் நிலைப்பாடு. இந்த விஷயத்தில் ஆளுநரின் செயல்பாடுகள் சரியாகத்தான் இருக்கிறது என அவர் கருத்து தெரிவித்தார்.

நகர செயலாளர் மஞ்சுநாத் சிறுபான்மை மாவட்ட செயலாளர் சையத் அசேன் ஒன்றிய செயலாளர் ஜெயபால் நகரத் தலைவர் தேவராஜ் .திம்மராயப்பா . கவுன்சிலர்கள் சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.