திமுகவில் பதவிக்கு பிச்சை எடுக்கிறேன்; ஆர்.எஸ். பாரதி பரபரப்பு பேச்சு...!

திமுகவில் பதவிக்கு பிச்சை எடுக்கிறேன்; ஆர்.எஸ். பாரதி பரபரப்பு பேச்சு...!

 திமுகவின் மூத்த தலைவரான ஆர்.எஸ். பாரதி எம்பி மற்றும் திமுக அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். கடந்த சில தினங்களாக பாஜகவினருக்கும், ஆர்.எஸ். பாரதிக்கும் கடுமையான கருத்து மோதல் இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுகூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய ஆர்.எஸ்.பாரதி, 'கவர்னருக்கு சம்பளம் கொடுப்பது நாம். அவர் டீ குடிப்பது முதல் அவர் வீட்டு வேலையாட்களுக்கு சம்பளம் கொடுப்பது வரை தமிழக அரசின் வரிப்பணம் தான் கொடுக்கப்படுகிறது. ஆனால், நம்முடைய வரிப்பணத்தில் அமர்ந்திருக்கும் அவர், திராவிடத்துக்கு எதிராக பேசுகிறார் என சாடினார்.

அதற்கு எதிர்வினையாற்றிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'ஆர்.எஸ் பாரதிக்கு இருக்கக்கூடிய தகுதி அறிவாய வாசலில் உட்கார்ந்து கொண்டு பிச்சை எடுப்பது தான். அங்கு உட்கார்ந்து கொண்டு கோபாலபுர குடும்பதினரிடம் பிச்சை வாங்குவதை ஆர்.எஸ்.பாரதி காலம் காலமாக வழக்கமாக கொண்டிருக்கிறார் என கடுமையாக சாடியிருந்தார். அதற்கு ஆர்.எஸ். பாரதி, ஆமாம் பிச்சைதான் எடுக்கிறேன் என கூறினார்.

இந்த நிலையில், திமுகவின் நீண்டநாட்களாக உழைத்தும் காலதாமதமாகத்தான் தனக்கு பதவி கிடைத்தது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அதிருப்தியாக பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது, ஒரே கட்சி ஒரே கோடி இருந்த எனக்கு 63 வயதில் தான் எம்பி பதவியே கிடைத்தது. இதையெல்லாம் ஜீரணித்துக்கொண்டுதான் கட்சியில் இருக்க வேண்டும்.

கட்சியில் துரோகம் செய்துவிட்டு முதுகில் குத்திவிட்டு சென்றவர்கள் பின்னால் வந்து கொஞ்சுவார்கள். அதனால் நான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன். நாங்கள் கொண்டு வந்து கட்சியில் சேர்த்தவர்கள் எல்லாரும் எம்பி, அமைச்சர் என ஆகிவிட்டனர். நாங்கள் இன்னமும் அப்படியேதான் இருக்கிறோம். கட்சியில் எவ்வளோ கஷ்டப்பட்டாலும் நம்மளை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், அதையெல்லாம் சகித்துக்கொண்டு கட்சியில் ஒரு தொண்டனாக இருக்கவேண்டும். என  ஆர்.எஸ். பாரதி கூறினார்.