சப்போர்ட் கேர்ள் சில்ட்ரன் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ரோட்டரி கிளப் ஆப் கோரல் சிட்டியின் சார்பில் சப்போர்ட் கேர்ள் சில்ட்ரன் என்ற கருத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற தலைப்பில் மாபெரும் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி முகமது சதக் தஸ்தகீர் கல்வியில் கல்லூரியில் 19.12.22 அன்று ரோட்டரி கிளப் தலைவர் RTN முனைவர் எஸ்.சோமசுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.பெண் சிசுக் கொலை, காதலிக்க மறுக்கும் பெண்கள் மீதான தாக்குதல், குடும்ப வன்முறை,பாலியல் தொல்லை ஆகியவற்றுக்கு கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்று முனைவர் சோமசுந்தரம் பேசினார். ரோட்டரி கிளப் செயலாளர் RTN ராஜேஷ்,RTN பி.டி.ராஜா மற்றும் சமூக நலத்துறை மாவட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வைத்தனர்.
இதில் பெண்களுக்கு ஏற்படும் வன்முறைகளை எவ்வாறு தடுப்பது என்ற தலைப்பில் மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அனைவரின் மனதைத்தொடும்படி இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் மகிலா சக்தி காங்கிரஸ்,வட்டார பெண்கள் மைய அலுவலர் மற்றும் மைய அலுவலர் மங்கை, குழந்தைகள் நல குழு தலைவர் காயத்ரி, வட்டாரப் பெண்கள் வளமைய அலுவலர், பயிற்சி இன்ஸ்பெக்டர் சண்முகப்பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இதில் ராமநாதபுரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றும் போது பெண்கள் 18 வயதிற்குள்ளாகவே தவறுகளை செய்கிறார்கள் 18 வயது என்பது 18 வயது நிறைவு பெறும் அன்றுதான் 18 வயது ஆகவே பெண்கள் 18 வயது நிரம்புவதற்கு முன்பாக தவறுகளை செய்து தாய் தந்தையர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுத்து விடாதீர்கள் 18 வயது முடிந்த உடன் உங்கள் தாய், தந்தையரிடம் சொல்லி உங்களுக்கு வேண்டிய காரியத்தை செய்து கொள்ளுங்கள் நல்ல பெயரை பெற்றுக்கொடுங்கள் என்று அவர் பேசியதை மாணவ மாணவிகள் எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள். முன்னதாக பெண்கள் மட்டும் கலந்துகொண்ட மனிதசங்கலி (ம) சிலம்பொலி சிலம்பாட்டக்கலைக் குழுவினரின் கிராமிய கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி