ஒசூர் மாநகராட்சி, அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் சிமெண்ட் சாலை
ஒசூர் மாநகராட்சி, அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக நமக்குநாமே திட்டத்தின் கீழ் மக்களின் பங்களிப்பாக 1.5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மாநகர மேயரிடம் வழங்கினர்*
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு 1.5லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 1.5லட்சம் ரூபாய் நிதிப்பெற மக்களின் பங்களிப்பாக அரசிற்கு 3ல் ஒரு பங்கான 1.5லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென்கிற நிலையில்
மகரிஷி வித்யா மந்திர் முன்னாள் மாணவர்கள் திரு . பிரசாத் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் மக்களின் பங்களிப்பை தானே வழங்குவதாக முன்வந்து, 1.5லட்சம் ரூபாய்க்கான காசோலையை
பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் , தலைமை ஆசிரியர் ஆகியோர் ஒசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா, அவர்களிடம் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஆணையாளர் பாலசுப்பிரமணியன், மண்டலக்குழு தலைவர் ரவி , மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், இந்திராணி, தலைமையாசிரியர் இரா: தேவசேனா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அயூப் கான், துணை தலைவர் நவ்ஷாத் இணை செயலாளர் நிசார் பொருளாளர் முஜிப் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
Hosur Reporter. E. V. Palaniyappan