பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து ஓசூரில் பிஜேபினர் ஆர்ப்பாட்டம்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரை கண்டித்து ஓசூரில் பிஜேபினர் ஆர்ப்பாட்டம்.

ஐநா சபையில் இந்தியாவையும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் தரைகுறைவாக பேசியதுடன் ஒருமையில் விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலால் புட்டோவை கண்டித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பிஜேபி சார்பில் கண்டன ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் எம் நாகராஜ் தலைமையில், ராம் நகர் அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐநா சபையில் இந்திய தேசத்தை மிகவும் தரக்குறைவாக பேசியதுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஒருமையில் பேசி உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலால் புட்டோவை கண்டிக்கும் விதமாக கண்டனம் முழக்கங்களை எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மேலும் இவ்வாறு தரக்குறைவாக பேசிய பிலால் புட்டோவை ஐநா சபையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் இந்தப் பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக பிலால் புட்டோ இந்தியாவிடம் மன்னிப்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முழக்கங்களையும் எழுப்பினார்கள்.