ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்பு...!

 ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்பு...!

*NCC பவள விழாவினையொட்டி, "தேசிய ஒற்றுமையை" வலியுறுத்தி தொடர் ஜோதி ஓட்டமாக ஒசூருக்கு வந்த ராணுவ கர்ணலுக்கு மாநில எல்லையில் மேயர் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்*

 NCC பவளவிழாவினையொட்டி, "தேசிய ஒற்றுமையை" வலியுறுத்தி இந்திய ராணுவ K.S.பத்வார் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி கன்னியாகுமாரியில் இருந்து புதுடெல்லியை நோக்கி தொடர் ஓட்டத்தை தொடங்கினர்..

தினந்தோறும் 50கிமீ தூரத்தை ராணுவ கர்ணல் ஓட்டம் மேற்க்கொண்டு வரும்நிலையில், இன்று காலை

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி பகுதியிலிருந்து கர்ணல் பத்வார் ஓட்டத்தை தொடங்கி ஒசூர் வழியாக தமிழக - கர்நாடகா மாநில எல்லை அத்திப்பள்ளிக்கு வருகை தந்தார் அப்போது ஜூஜூவாடி பகுதியில் பள்ளி மாணவர்கள் தேசியக்கொடி ஏந்தி வரவேற்றனர்..

பின்னர் ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்று வழி அனுப்பி வைத்தார்.. ராணுவ கர்ணல் K.S.பத்வார் கர்நாடகா மாநில எல்லைக்குள் ஜோதி ஏந்தி புறப்பட்டார்

வருகிற ஜனவரி மாதம் 18ம் தேதியன்று புதுடெல்லியில் தொடர் ஓட்டம் நிறைவடைய உள்ளது

 ஓட்டத்தை தொடங்கிய ராணுவ கர்ணல் K.S.பந்துவார் அவர்கள் இன்று தமிழக மாநில எல்லை ஜூஜூவாடி பகுதிக்கு வருகை தந்த நிலையில் மாணவர்கள்,ராணுவ அதிகாரிகள் வரவேற்பு வழங்கினர்

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, தகவல் தொழில் நுட்ப அணியை சார்ந்த வடிவேல், கலைவாணன் மற்றும் பொதுமக்களுடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan