22 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பிய ஏரி : தெப்பம் விட்டு, கிடா வெட்டி, பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடிய கிராம மக்கள்

 22 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பிய ஏரி :  தெப்பம் விட்டு, கிடா வெட்டி, பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடிய கிராம மக்கள்




*22 ஆண்டுகளுக்குப் பின்பு நிரம்பிய ஏரி : ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி, பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கி கொண்டாடிய கிராம மக்கள்*

ஓசூர் அருகேயுள்ள குந்துமரணப்பள்ளி கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் பழமையான ஏரி உள்ளது. கடந்த 22 ஆண்டுகளாக இந்த ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த நிலையில் தற்போது அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இந்த ஏரி முழுவதும் நிரம்பி உள்ளது. 22 ஆண்டுகளுக்கு பின் ஏரி  நிரம்பியதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஏரி நிரம்பியதை கொண்டாடும் வகையில், இன்று கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் ஏரி கரைக்கு சென்று கிராம தேவதைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதனைத்தொடர்ந்து ஏராளமானோர் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஆடு மற்றும் கிடா வெட்டி பூஜைகளை செய்தனர். இதில் முக்கிய நிகழ்வாக கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட பெரிய தெப்பத்தை செய்து அதில் சுவாமிகளை வைத்து மேளதாளங்களுடன் ஏரி முழுவதும் வலம் வந்தனர்.

ஏரி முழுவதும் தெப்பம் வலம் வருவதை ஏரி கரையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் பார்த்து ரசித்தனர். அதனைத்தொடர்ந்து கிராம மக்கள் அனைவருக்கும் சைவம்  உணவுகள் விருந்தாக படைக்கப்பட்டது. இதில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு சென்றனர்.

B. S. Prakash 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்