இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1991 வழங்கிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் .

இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1991 வழங்கிய வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் .

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் நகர் சந்தை திடலில் மாவட்ட தலைவர் சுல்தான் தலைமையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1991 வழங்கிய வழிபாட்டு தலங்களை பாதுகாக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்கிழக்கு மாவட்ட சத்திய பிரச்சார பேரவை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் ஆலிம்கிரா அத் ஓதினார்.மேற்கு மாவட்ட தலைவர் பாகிர் அலி வரவேற்புரை ஆற்றினார்.கிழக்கு மாவட்ட செயலாளர் ராவுத்தர் நைனா முகமது,மேற்கு மாவட்ட செயலாளர் சபியுல்லாஹ், கிழக்கு மாவட்ட பொருளாளர் ஹாஜா நஜிமுதீன் மேற்கு மாவட்ட பொருளாளர் முஹைதீன் அப்துல் காதர்,கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் முகமது சிராஜுதீன் மேற்கு மாவட்ட துணைத்தலைவர் அப்துல் ரசாக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண்டன உரையை ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக்கழக மாநில பொதுச் செயலாளர் பாளை ரபிக்,விடுதலை தமிழ் புலிகள் கட்சி மாநில தலைவர் குடந்தை அரசன்,ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநில செயலாளர் அன்வர் அலி, தலைமை கழக பேச்சாளர் ஜாகிர் உசேன், விசிக மண்டல செயலாளர் முகம்மது யாசின், எஸ்பிபி மாநில செயற்குழு உறுப்பினர் மௌலவி அரிசி S.D.P.I மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கீர் அருசி, CPI மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர்.முருக பூபதி, சிபிஐ எம் தாலுகா செயலாளர் செல்வராஜ்,பெரியார் பேரவை தலைவர் நாகேஷ்வரன்,நாம் தமிழர் கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர் கனி,தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார்,ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் ஐ.மு.மு.க.ராமநாதபுரம் நகர் தலைவர் மன்சூர் அலி நன்றியுரை கூற கண்டன ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 1991 இல் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் வழங்கிய வழிபாட்டு பாதுகாப்பு உரிமையை நீதிமன்றங்களும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் இந்தியாவின் இறையாண்மையை மதித்து பாதுகாக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் என்ஐஏ தேசிய புலனாய்வு மற்றும் காவல்துறை, இஸ்லாமிய இளைஞர்களை குறி வைத்து அவர்களின் வீடுகளில் அதிகமான காவல் துறை அதிகாரிகளை அழைத்துச் சென்று சோதனைசெய்கின்ற பொழுது அங்கு எதுவும் கிடைக்காவிட்டாலும், பத்திரிகைகளிலும் அந்த பகுதிகளிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்துகின்றனர். அந்த இளைஞர்களை தனிமைப்படுத்தும் செயலை அங்கு காவல்துறை செய்கிறது என்பதையும் கண்டிக்கின்றோம். வாட்ஸ் அப்பிலும் இளைஞர்கள் தான் மரணித்து விட்டால் ஷஹீதாகிவிட்டால் என்கின்ற இரண்டு வார்த்தைகளை ஸ்டேட்டஸாக வைக்கும் அந்த இளைஞர்களை கைது செய்து அவர்களை எந்த வழக்கில் கைது செய்யப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடாமல் பொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இத்தகைய செயல்களை ஐ.மு.மு. கழகம் வன்மையாக கண்டிக்கிறது உள்ளிட்ட நான்கு தீர்மானங்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.    

 ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி