மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா!!

 மகாகவி பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா!!

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் கலெக்டர் வளாகத்தில் உள்ள முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழா முதல்வர் முனைவர் சோமசுந்தரம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த ஆண்டு முதல் யுஜிசி அறிவிப்பின்படி பாரத மொழிகள் சங்கமம் என்ற தலைப்பில் இவ்விழா கொண்டாடப்பட்டது. இதில் அரசு மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி தமிழ் ஆசிரியை தமிழரசி சிறப்புரையாற்றினார். ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழ் பேராசிரியர் கிருத்திகா நன்றியுரை கூற பாரதியாரின் 141 வது பிறந்தநாள் விழா இனிதே நிறைவு பெற்றது.   

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N. அன்வர் அலி