10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 13 விவரங்கள் சேகரிப்பு

 10 & 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 13 விவரங்கள் சேகரிப்பு

10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியான நிலையில், தேர்வு எழுத இருக்கும் மாணவர்களிடம் 13 தகவல்களை சேகரிக்க பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பின் இந்த ஆண்டு எந்தவித குழப்பமும் இன்றி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் கடந்த மாதம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் தமிழக பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து பொதுத்தேர்விற்கு தயாராகி வரும் மாணவர்களிடம் 13 தகவல்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பிய சுற்றறிக்கையில், மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், ஆண்டு வருமானம் உள்ளிட்ட தகவல்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர் அல்லது பெற்றோரின் மொபைல் போன் எண், பாடத் தொகுப்பு பயிற்று மொழி, வீட்டு முகவரி ஆகிய தகவல்களையும் பெற்று பள்ளிக் கல்வித் துறையின் ‘EMIS’ தளத்தில் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.