ஓசூர் மாநகராட்சி பள்ளிகளை தூய்மை மற்றும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக மாற்றப்படும்.

ஓசூர் மாநகராட்சி  பள்ளிகளை தூய்மை மற்றும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக மாற்றப்படும்.

ஓசூர் மாநகராட்சி அரசு பள்ளிகளை தூய்மை மற்றும் சுகாதாரத்தில் முன்மாதிரியாக மாற்றப்படும். மாநகராட்சி கல்வி குழு தலைவர் உறுதி.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் கல்விக் குழு கூட்டம் அதன் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் பல்வேறு மேம்பாட்டு திட்டப் பணிகள் குறித்து விவாதித்தனர். 

மேலும் பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் சிறப்பு அம்சங்கள் குறித்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி குழு தலைவர் ஸ்ரீதரன் தெரிவிக்கையில், 

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் சுமார் 44 அரசு பள்ளிகளையும் தூய்மை மற்றும் சுகாதாரத்தில் தமிழகத்திலேயே முன்மாதிரியான பள்ளிகளாக மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது...என தெரிவித்தார். 

மேலும் டெல்லி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இயங்கும் அரசு பள்ளிகளை முன் உதாரணமாக சுட்டிக் காட்டும் நிலைமை மாறி அவர்கள் தமிழகத்தில் குறிப்பாக ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளின் நிலவும் தூய்மை மற்றும் சுகாதார மேம்பாட்டு அம்சங்களை முன் உதாரணமாக சுட்டிக் காட்டும் அளவிற்கு மாற்றி அமைக்கப்படும்...என்று உறுதி அளித்தார்.

Hosur Reporter. E. V. Palaniyappan