ஓசூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதலிடம்*

 ஓசூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் முதலிடம்

கிருஷ்ணகிரி வருவாய் மாவட்டம் அளவிலான பள்ளிகளுக்கு இடையே வாலிபால் போட்டிகள் கிருஷ்ணகிரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டு மைதானத்தில் 28/10/2022 நடைபெற்றது.

இந்த போட்டியில் 9 மண்டலங்கள் கலந்து கொண்டன இதில் ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 14 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் 17வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் முதலிடம் பிடித்தனர் இந்த போட்டியில் வெற்றி பெற்ற.   மாணவிகளை மாநகர மேயர் திரு.S.A.சத்யாEx.MLA அவர்கள் வாழ்த்தினார். தொடர்ந்து இந்த மாதம் இறுதியில் மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று கூறினார். இந்நிகழ்வில் மாநகர அவைத் தலைவர் செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர் தாயுமானவன், மாணிக்கவாசகம் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan