ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு - சென்னை ரயில்வே பாதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை.

ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு - சென்னை ரயில்வே பாதை  மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்  ஓசூருக்கு வருகை.

ஓசூர், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு - சென்னை ரயில்வே பாதை திட்டம் குறித்து விளக்க மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஜனவரி மாதம் ஓசூருக்கு வருகை. பிஜேபி மாநில செய்தி தொடர்பாளர் சி நரசிம்மன் தகவல்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிஜேபி மாநில செய்தி தொடர்பாளர் சி நரசிம்மன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, ஓசூர் கிருஷ்ணகிரி வழியாக பெங்களூர் சென்னை ரயில்வே பாதை அமைக்கும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிப்பதற்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏற்கனவே 1900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட பணிகளை துவக்குவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த மாதம் இந்த திட்டம் குறித்து விளக்குவதற்கும் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்கும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை தர உள்ளார். என தெரிவித்துள்ளார்.

மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வரை மெட்ரோ ரயில் திட்டமானது விரிவாக்கம் செய்யப்படுவதற்கு சாதிய கூறுகளை ஆய்வு செய்து அதற்கான அறிக்கையை தயாரிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெருநகரங்களில் 17 வது இடத்தை பிடித்துள்ள ஓசூர் மாநகருக்கு உலகத்தரம் வாய்ந்த மாவட்ட அளவிலான பெரிய மருத்துவமனை அமைப்பதற்காக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே 100 கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே இதனை பயன்படுத்தி தமிழக முதலமைச்சர் விரைவில் இதற்கான நிலம் தேர்வு செய்து இடங்களை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என பிஜேபி சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Hosur Reporter. E. V. Palaniyappan 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்