தளி அருகே பட்டியில் இருந்த ஆடு,மாடு,பன்றிகளை திருடி சென்ற திருடர்களை பிடிக்க முடியாமல் போலிசார் திணறல்..
தேன்கனிக்கோட்டை, நவ.5-
தளி அருகே பட்டியில் இருந்த ஆடு,மாடு,பன்றிகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து சிசிடிவி கேமராவில் பதிவு: திருடர்களை பிடிக்க முடியாமல் போலிசார் திணறல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அடுத்த, கர்நாடகா மாநிலம் ஆனேக்கல் தாலூகாவிற்கு உட்பட்ட ஜிகனி, ஹெப்பகோடி, அத்திப்பள்ளி, சர்ஜாபூர் ஆகிய பகுதிகளில் பட்டியில் இருக்கும் கால்நடைகள் தொடர்ந்து திருடுபோவதாக தொடர்ந்து புகார்கள் வருவதாக கூறப்படுகிறது.
ஜிகனி அடுத்த மடப்பட்டணாவில் லட்சுமம்மா - மஞ்சுநாத் ஆகிய தம்பதிகள் வளர்த்து வந்து பட்டியில் அடைக்கப்படட்ட 40 பன்றிகளை ஒட்டுமொத்தமாக திருடி ஓட்டிசெல்லும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதேபோல இந்தலவாடி கிராமத்தில் தோட்டத்தில் இருந்த ஆடு,மாடுகளும்,
ஹெப்பகோடி அடுத்த ஆவலஅள்ளி கிராமத்தில் ராஜப்பா என்பவருக்கும் சொந்தமான மாடுகளை 3 நபர்கள் திருடி செல்லும் காட்சிகள் கேமராவில் பதிவாகி உள்ளநிலையில், தொடர்ந்து கால்நடைகள் திருடப்படுவதை தடுக்க முடியாமலும், குற்றவாளிகளை போலிசார் திணறி வருகின்றனர்.
B. S. Prakash