தேன்கனிகோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து. கண்டன ஆர்பாட்டம்,

 :தேன்கனிகோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசை கண்டித்து. கண்டன ஆர்பாட்டம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டையில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக.நகர தலைவர் வெங்கட்ராஜ் மற்றும் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் நாகேஷ் குமார் தலைமையில், தேன்கனிகோட்டை பழைய பேருந்துநிலையத்தில், பால் விலை உயர்வு, மின்சார கட்டண இரட்டிப்பு உயர்வு, சொத்துவரி உயர்வு, மற்றும் பல உணவு பொருட்கள் மேல் வைத்துள்ள விலைவாசியை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர், இந்த கூட்டத்தில் மாவட்ட மகளீர் அணி தலைவி வரலஷ்மி, பிரபு, ராஜேந்திரன், மற்றும் மாவட்ட ஒன்றிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என இந்த கண்டன ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதேபோல் கெலமங்கலம் மேற்கு ஒன்றியத்தின் சார்பாக பாரதிய ஜனதா கட்சியினர், கெலமங்கலம் ஒன்றிய தலைவர் எல் சந்துரு தலைமையில், திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து, கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரூபாஜீ முன்னிலையில், கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் ஒன்றிய பொது செயலாளர்கள் மாதேஷ், மஞ்சு, சிலம்பரசன் விவசாய அணி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், மற்றும் பாரதிய ஜனதா கட்சி முக்கிய நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

 பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ராய கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஒன்றிய தலைவர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை தலைவர் முருகன் மாவட்ட தலைவர் (பிரிவு) மு. கருணாநிதி, மாநில செயலாளர் (பிரிவு) நந்தகுமார் மகளிர் அணி மாவட்ட துணை தலைவர் லட்சுமி பொதுச்செயலாளர் மகேந்திரன் முனுசாமி மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

[] B S Prakash Thally