75 ஆண்டுகளாக மின்சார இணைப்பு இல்லாத மலைவாழ் மக்களுக்கு புதியதாக மின்இணைப்பு,

 75 ஆண்டுகளாக மின்சார இணைப்பு இல்லாத மலைவாழ் மக்களுக்கு புதியதாக மின்இணைப்பு,

பெட்டமுகிலாளம் அருகே 75 ஆண்டுகளாக மின்சார இணைப்பு இல்லாத மலைவாழ் மக்களுக்கு புதியதாக மின்இணைப்பு,

கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிகோட்டை வட்டம் பெட்டமுகிலாளம் ஊராட்சிக்குட்பட்ட மலைகிராமம் குடிசலூர், இங்கு முழுக்க மலைவாழ் மக்கள் வாழும் பகுதி, இந்த பகுதி மக்கள் இந்தியா சுதந்திரம் வாங்கி. 75 ஆண்டுகாலம் கடந்தும் மின்சாரம் என்பதே பார்க்காமல் சிமினி விளக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தனர், இதையறிந்த

 தளி சட்டமன்றத் உறுப்பினர்.டி ராமச்சந்திரன் தீவிர முயற்ச்சியில், இந்த ஊராட்சியில் மொத்தம் 90 மின் இணைப்பு விண்ணப்பங்கள் பெற்று  மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இன்று  22-11-2022,

17 குடும்பங்களுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டது, மீதமுள்ள குடும்பங்களுக்கு, படிபடியாக மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார், மேலும் இந்த மின் இணைப்பு நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர்கள், மாரப்பன், பிரசாந்து, மின்சார துறை அதிகாரிகள் S.கிருபானந்தன் செயற்பொறியாளர் ஓசூர், P.பாலசுப்பிரமணியன் உதவி செயற்பொறியாளர் தேன்கனிகோட்டை,

 உதவி பொறியாளர்கள், எழில்மாறன், பாஸ்கர், இருதயராஜ், தேன்மொழியாழ், மாணிக்கம்,.ஊராட்சி மன்ற தலைவர்கள், மூன்றாஜ், யசோதாமணி, மற்றும் மின்சார வாரிய துறை அலுவளர்கள், பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கலர்ந்துகொண்டனர், மேலும் மின்இணைப்பு வழிங்கி வெளிச்சம் கொடுத்தமைக்காக கிராம மக்கள் தளி சட்டமன்ற உறுப்பினர் 

டி ராமச்சந்திரன், மின்சார துறை அதிகாரிகளுக்கும் பொன்னாடை போற்றி, மலர்மாலை அணிவித்து, மகிழ்ச்சியோடு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்,

B.S. Prakash