DTCP பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை....!!

 DTCP பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுக்கான  இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை....!!

 தமிழக தனியார் பள்ளி கட்டிட அனுமதி பெறுவதற்கு விண்ணப்பித்து காத்திருக்கிற அனைத்து பள்ளிகளுக்கும் உடனடியாக கட்டிட அனுமதி வழங்கிட கோரியும், நகராட்சி, மாநகராட்சி, மற்றும்  மலை மாவட்டங்களுக்கும் அரசாணை எண் 76 இன் படி கட்டிட அனுமதி வழங்குவது  சம்பந்தமான பேச்சு வார்த்தையில் மாண்புமிகு. வீட்டு வசதி துறை அமைச்சர் சு. முத்துச்சாமி. வீட்டு வசதி துறை முதன்மைச் செயலாளர் ஹிதிநேஸ் குமார் மக்குவானா ஐஏஎஸ். டிடிசிபி இயக்குனர் சரவணராஜா ஐஏஎஸ். கொங்கு மக்கள் தேசிய கட்சி மாநிலத் தலைவர்  E.R. ஈஸ்வரன் எம் எல் ஏ. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே. ஆர்.நந்தகுமார். மாநிலத் தலைவர் பேராசிரியர் A. கனகராஜ்.மற்றும் பல்வேறு சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் கலந்துகொண்டு தனியார் பள்ளியின் பிரச்சனைகள் அதில் உள்ள சிக்கல்கள்  குறித்து பேசி திருப்பி அனுப்பப்பட்ட அனைத்து கோப்புகளுக்கும் உடனடியாக டி டி சி பி அனுமதி வழங்கவும். விண்ணப்பிக்காதவர்கள் கூட டிசம்பர் மாதத்திற்குள் விண்ணப்பித்து புதிய கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளவும் மலை மாவட்டங்களி ள் உள்ள பள்ளிகளும்

உடனடியாக விண்ணப்பிக்கவும்  அனைவருக்கும் உடனடியாக கட்டிட அனுமதி வழங்குவதாகவும், திட்டமிடப்பட்ட பகுதியான நகராட்சி மாநகராட்சி  பகுதிகளில் கட்டிட அனுமதி வழங்கு  வதற்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகவும், வழக்கு முடிந்த பின் அவர்களுக்கும் இந்த 76 அரசு ஆணைப்படி கட்டிட அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது..

எனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்காதவர்கள் அனைவரும் உடனடியாக விண்ணப்பித்து இன்னும் மூன்று மாத காலத்திற்குள்  உரிய கட்டிட அனுமதி பெற்றுக்கொள்ள தனியார் பள்ளிகள் மாவட்ட நிர்வாகிகளை அணுகி உரிய கோப்புகளோடு வந்தால் உடனடியாக டிடிசிபி அனுமதி பெற்று தரப்படும்..

 இனிமேல் தமிழகத்தில் அனைத்து தனியார் பள்ளிகள் சங்கங்களை ஒருங்கிணைத்து  சென்னை ஐயாத்  ஹோட்டலில் ஒரு மாபெரும் கூட்டமைப்பை Joint Action Commitee for Private Schools Association உருவாக்கி அதன் மூலம் பள்ளிக்கல்வி அமைச்சர் தமிழக முதல்வர் அவர்களை  சந்தித்து உடனடியாக அனைவருக்கும் மூன்றாண்டு அங்கீகாரத்தை பெற்றுத் தருவது என்று முடிவு எடுத்திருக்கின்றோம்..

 கே ஆர் நந்தகுமார்   மாநில செயலாளர்