தலித்துகளை மதிக்காத திமுக; தேனியில் அமைச்சர் கயல்விழிக்கு நேர்ந்த அவமானம்.....!?
தேனி மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தேனி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவ, மாணவி விடுதிகள் பள்ளிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்ய வருகை புரிந்தார்.
தேனி மாவட்டத்தில் உள்ள மாவட்ட செயலாளர்கள் தெற்கு மாவட்ட செயலாளர் கம்பம் ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ரத்ன சபாபதி, சக்கரவர்த்தி, லக்ஷ்மணன் உள்ளிட்ட 7 ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட யாரும் வரவில்லை.
அதே நேரம் ஆதிதிராவிடர் நலத்துறையில் பொறுப்பு வைக்கக்கூடிய திருக்கண்ணனும் வர மறுத்து விட்டாராம்.
உள்ளூர் திமுக பிரமுகர்களும் அமைச்சர் கயல்விழி செல்வராஜுக்கு தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த போது உரிய வரவேற்பு மரியாதை அளிக்காமல் புறக்கணித்து விட்டனர்.
குறிப்பாக தேனி மாவட்டத்திற்கு கே. என். நேரு, ஐ.பெரியசாமி, கீதாஜீவன், பெரிய கருப்பன், உள்ளிட்ட எந்த அமைச்சர்கள் வந்தாலும் தேனி மாவட்டத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், திமுக முக்கிய பிரமுகர்கள் என ஒட்டு மொத்த திமுகவினர் சிறப்பாக மாலை, மரியாதை அளித்து உற்சாகமாக வரவேற்பு அளிப்பார்கள்.
கடந்த வெள்ளிக்கிழமை தேனி மாவட்டத்திற்கு வருகை புரிந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழிக்கு எந்த ஒரு திமுக பிரமுகர்களும் உரிய வரவேற்பு அளிக்கவில்லை என்பது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் திமுகவினர் செய்து வருகின்ற இந்த சமூக விரோத செயலுக்கு, சமூக நீதிக்கு எதிரான இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பட்டியில் இன மக்களை ஓட்டுக்காகவும், கூட்டுக்காகவும் மட்டுமே பயன்படுத்தும் இவர்கள். இவர்களே ஒரு மனிதனாக கூட மதிப்பதில்லை. கூட்டணி கட்சித் தலைவர் திருமாவளவனாக இருந்தாலும் சரி தனிமத்தை ஊராட்சி மன்ற தலைவனாக இருந்தாலும் சரி இவளிடம் கைகட்டி வாய்ப்புக்கு தான் பேச வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
திமுகவை பொறுத்தவரை சமூகநீதி என்பது ஏற்றிலும் எழுத்திலும் பேச்சிலும் மட்டும் தான் மட்டுமே உள்ளதே தவிர உண்மையான நடைமுறை இல்லை.
சமூகநீதி என்பது பேசுவதை விட செயல்படுத்துவது தான் திராவிட மாடல் என்பதை இந்த அரசியல்வாதிகள் எப்போது உணர்வார்களோ !.