கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மெகா முகாம்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளுக்கான மெகா முகாம்கள் 


மாண்புமிகு முதலைச்சர் அவர்களின் ஆணையின்படி ,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மெகா முகாம்கள் 18.10.2022 முதல் 26.10.2022 வரை வட்டாட்சியர் அலுவலகம் தோறும் நடைபெறுகிறது.

இம்முகாமிகளில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர்.

மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அமைத்தல் அமைச்சகத்தின் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை,வழங்குதல்,

உதவி உபகரணங்கள்,காலிபர் கம்பி காலிறை, செயற்கை அவயம், அக்குள் கட்டை,எல்போ கிரட்சஸ்,வீல்சேர்,மூன்று சக்கர சைக்கிள்,பீட்டர் வீல்சேர்.காது கேளாதார்க்கான காதொலி கருவிகள்,பார்வையற்றோர்க்கான மடக்கு குச்சு,பிரய்லிவாட்ச்,மூளை முடக்குவாத்ததால் பாதிக்ப்ப்பட்ட சிறார்களுக்கான உதவி உபகரணங்கள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.2000. /-  75 /- சதவிகிதம் மேல் கைகால் பாதித்த மாற்றுத்தறனாளிகளுக்கு ரூ.2000/ வழங்கும் திட்டம்.மனு வழங்கவும், உதவி உபகரணங்களுக்கான பயனாளிகளை தேர்வு செய்ய, மாவட்ட தொழில் மையம் மூலம் கடன் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் வேலை வாய்ப்பு,வட்டாட்சியர் அலுவலகம் மூலமாக மாதாந்திர உதவித்தொகை, பயிற்சி,உபகரணங்களுக்கான அளவீடுகள் எடுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான மெகா முகாம் நடைபெறுகிறது.

18.10.2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணி முதல்  மதியம் 1.00 மணி வரை 

கள்ளக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்.

19.10.2022  காலை 10  மணி முதல் மதியம் 1 மணி வரையில் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்.

20.10.2022 காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்.

21.10.2022 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில்

22.10.2022 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சின்னசேலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும்.

26.10.2022  காலை 10. மணிமுதல் மதியம் 1 மணி வரையில் கல்வராயன்மலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்திலும் முகாம்கள் நடைபெறுகிறது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் முகாம்களில் மருத்துவர்கள்,அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ளனர், மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடையுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்