தமிழக அரசு எடுத்த லேட்டஸ்ட் முடிவு...! இன்ப அதிர்ச்சியில் அரசு ஊழியர்கள்...!!
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு இன்றைய தினம் அரசு விடுமுறை நாளாகும். இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
தமிழகத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு பொது போக்குவரத்து மற்றும் தனி போக்குவரத்தின் மூலம் பயணித்த வண்ணம் உள்ளனர். கிட்டத்தட்ட கடந்த மூன்று நாட்களாக பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மற்றொரு பக்கம் கடை வீதிகளிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக கூடுதல் மற்றும் சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து துறை சார்பாக இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது தீபாவளி அன்று (அக்.24) மட்டுமே விடுமுறை தினமாக உள்ளது. மறு நாள் வழக்கம் போல அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு வேலை நாளாகும். அதனால் மக்கள் தீபாவளி அன்று இரவு தங்களது ஊர்களில் இருந்து கிளம்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அப்போது தான் மறு நாள் தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து சேர முடியும். ஒரே நேரத்தில் அனைவரும் பயணம் செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலானது மேலும் அதிகரிக்கக்கூடும்
அதனால் அரசு மக்கள் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் சொந்த ஊர்களில் இருந்து தாங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வந்து சேரும் வகையில் அக்டோபர் 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் தனியார் பள்ளிகள் தீபாவளிக்கு மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை (அக்.25) அன்று விடுமுறையை அறிவித்துள்ளது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது தனியார் பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்துள்ள நிலையில அடுத்ததாக அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
நமக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை உண்டா? இல்லையா? என்கிற குழப்பத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுத்துறை அதிகாரிகளும் ஏக்கத்தில் காத்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் தற்போது தமிழக அரசு நாளை விடுமுறை என்று அறிவித்துள்ளது.
தமிழக அரசு லேட்டாக ஒரு முடிவை எடுத்திருந்தால் லேட்டஸ்டான அறிவிப்பாக இதை அனைவரும் பார்க்கின்றனர்.
முன்பெல்லாம் அரசு ஒரு முடிவை எடுத்தால் அதை மக்கள் பின்பற்றுவார்கள். இப்போதெல்லாம் அப்படி அல்ல அரசுத்துறை அலுவலர்கள் எடுக்கின்ற முடிவுக்கு அரசாங்கம் கட்டுப்பட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்...? யார் காரணம்...? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்...!