மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல: கே.பி.முனுசாமி பேட்டி....
கிருஷ்ணகிரி :தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்வது ஆரோக்கியமானது அல்ல இதனால் அரசு அதிகாரிகளி வுடையே குழப்பம் ஏற்படும் - கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி
கிருஷ்ணகிரி அருகே போத்திநாயனப்பள்ளி கிராமத்தில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே பி முனுசாமி கலந்து கொண்டு நியாயவளிக்கடையை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேபி முனுசாமி. மத்திய அரசின் மாநில அரசும் இணக்கமாக செயல்பட வேண்டும் அப்போதுதான் இறையாண்மையை காப்பாற்ற முடியும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இந்த அளவிற்கு கீழே இறங்கி வரவில்லை. தமிழகத்தில் 50 ஆண்டுகளாக தேசிய கட்சிகள் ஆட்சியில் இல்லை. மாநில கட்சிகள் ஆட்சியில் உள்ளது. தற்போது பாஜக அரசு மத்திய அரசு திட்டங்களை நாங்கள் கொண்டு வந்து உள்ளோம் என தமிழகத்தில் ஆய்வு செய்து சொல்கிறார்கள். அது அவ்வளவு ஆரோக்கியமான செயல் அல்ல. காரணம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மாறுபட்ட சிந்தனைகள் வரும்பொழுது அதிகாரிகளிடையே குழப்பங்கள் சங்கடங்கள் சூழ்நிலைகள் வந்துவிடும். இதநாள் அரசு அலுவலர்கள் பணிகள் குந்தகம் ஏற்படும். இதில் மத்திய மாநில அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என்பது எங்களின் நிலைமை.மத்திய பாஜக அரசு தனது செயல்பாட்டை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்கிறது. தங்களது கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இதுபோல் செய்து கொண்டு உள்ளார்கள் அதற்காக இதுபோன்று துருப்புச் சீட்டை எடுத்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமாக இருக்காது என்பது எங்களது கருத்து.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது முயற்சி செய்து வருகின்றனர் அதற்காக தங்களை முன்னிலைப்படுத்திக்கொண்டு வருகின்றனர். அதைப்பற்றி விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை தமிழகத்தில் கிராமங்கள் தோறும் இருக்கக்கூடிய கட்சி திமுக அதிமுக தற்போது திமுக ஆட்சியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சி அதிமுக என்பது எதார்த்தம் உண்மை. திமுக பொதுக்குழுவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுகவை எதிர்ப்பது பிரதான கொள்கை என தெரிவித்துள்ளார். இது போல் தான் அண்ணாவின் கொள்கையை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி செயல்படாததால் எம்ஜிஆர் அவர்கள் புதிய இயக்கத்தை தொடங்கினார்.
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளது அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து அனைத்து மருத்துவமனைகளுக்கும் விரைவாக மருந்துகள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக அரசு 16 மாத ஆட்சியில் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மின் கட்டண உயர்வு சொத்து வரி உயர்வு மக்கள் மத்தியில் ஆட்சிக்கும் தனக்கும் கெட்ட பெயர் வருவதை உணர்ந்த முதலமைச்சர் அதனை திசை திருப்ப இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் அறிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால் திசை மாறி சென்று விட்டதாக கூறப்படுகிறது தொடர்பான கேள்விக்கு வருத்தமான கேள்வி கொள்கை பிடிப்பு உள்ள ஒரு தொண்டன் எந்த சூழ்நிலையும் தான் ஏற்றுக் கொண்ட தலைமைக்கும் தலைமையின் கீழ் பணியாற்றக்கூடிய நிலையில் இருந்து மாறவே மாட்டான் அப்படிப்பட்ட ஒரு தொண்டன் தான் நான் என்று தெரிவித்தார்.
Krishnagiri Reporter. Moorthy