தென்காசியில் பள்ளி அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி. குறித்த முக்கியமான ஆலோசனை கூட்டம்...!

தென்காசியில் பள்ளி அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி. குறித்த முக்கியமான ஆலோசனை கூட்டம்...!

தென்காசியில் பள்ளி அங்கீகாரம் மற்றும் டி.டி.சி.பி. குறித்த முக்கியமான ஆலோசனை கூட்டம்...வருகின்ற 17 10 2022 (திங்கட்கிழமை) மதியம் 2.00 மணி அளவில் பாரத் மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

 இதில் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் திரு.K.R.
நந்தகுமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார், 

மிக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் நம் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம், .

நிகழ்கால பிரச்சனையான டிடிசிபி, இபிஎப், இ எஸ் ஐ, நர்சரி பிரைமரி பள்ளிகள்தொடர் அங்கீகாரம் பெறுதல் புதிய மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக சென்னை தனியார் பள்ளி இயக்குனரகத்தில் பெற வேண்டும் என்று சொல்கிறார்களே அதற்கான தீர்வு என்ன.மேலும் புதிதாக துவங்கியுள்ள தனியார் பள்ளி இயக்குனரகம் குறித்தும் அதனுடைய செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை பெற , தனியார் பள்ளிகள் கல்வி கட்டண கமிட்டி, நமக்கான கட்டணங்கள் பற்றிய தீர்வுகள் முக்கிய குறித்த மிக முக்கியமான கூட்டம் நடைபெற உள்ளது எனவே அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று மாநிலத் துணை தலைவர் திரு ஆனந்த ராமன் மாநில அமைப்பு செயலாளர் திரு கல்யாணி சுந்தரம் மண்டல தலைவர் மரிய சூசை மண்டல செயலாளர் பெஸ்ட் ராஜா, மண்டல பொருளாளர் திருமதி உஷா தென்காசி மாவட்ட தலைவர் சுபாஷ் கண்ணா மாவட்டச் செயலாளர் ராயல் ஹக்கீம் மாவட்ட பொருளாளர் பாஸ்கர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கமலநாதன் மற்றும் தென்காசி மாவட்ட நிர்வாகிகள்  ஆகியோர் தென்காசி  மாவட்ட  பள்ளி நிர்வாகிகளுக்கு அன்பான அழைப்பு விடுத்துள்ளனர்.