ஓசூரில் 'எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி'யில் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்த மகேந்திர சிங் தோனி ....!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமக்கு சொந்தமான 'எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி'யில் நான்கு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
மேலும் அவரது முன்னிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பிரிவான சூப்பர் கிங்ஸ் அகாடமி உடன் எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளியின் அதிகாரப்பூர்வ இணைப்பு பற்றிய அறிவிப்பும் இம்மைதான திறப்பு விழாவில் வெளியானது.
பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கிரிக்கெட்டின் தொழில் முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் சூப்பர் கிங்ஸ் அகாடமி இடையான இணைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அத்துடன் வளாகத்தில் உள்ள கால்பந்து மைதானத்தையும் டிஜிட்டல் முறையை தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவுள்ளவர்களாகவும் மாற்றும் வகையில் சுமார் 1800 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் டிஜிட்டல் மைக்ரோசாப்ட் இன் உலகளவியல் பயிற்சி கூட்டாளியாக Tech - Avant - Garde உடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பேசிய நிர்வாக அதிகாரி, “கையில் டிஜிட்டல் கல்வி விதிமுறை குறித்து ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளோம். அவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சிக்கு பிறகு ஆசிரியர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் மைக்ரோசாப்ட் சான்றிதழ்கள் வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.