இரண்டு ஏரிகளில் கரைகள் உடைப்பு : விவசாய நிலங்களையும் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் மற்றும் விவசாய்கள் பாதிப்பு

 இரண்டு ஏரிகளில் கரைகள் உடைப்பு :  விவசாய நிலங்களையும் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் மற்றும் விவசாய்கள் பாதிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதியில்  கனமழைக்கு இரண்டு ஏரிகளில் கரைகள் உடைப்பு :  விவசாய நிலங்களையும் வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் பொதுமக்கள் மற்றும் விவசாய்கள் பாதிப்பு*

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில்  கன மழை பெய்தது. 

இந்த கனமழை காரணமாக    கெலமங்கலம் அடுத்துள்ள ஒசபுரம் மற்றும் H.செட்டி பள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கரைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏரியில் சேமிக்கப்பட்டிருந்த வெள்ள நீர் வீணாக வெளியேறி செல்கிறது. வெளியேறும் இந்த நீரானது சனத்குமார் ஆற்றிலும், ஏரிகளின் நீர்வரத்து பாதைகளிலும் வீணாக ஓடுகிறது.

இந்த வெள்ள நீர் கெலமங்கலம் நகர பகுதியில்  கலைஞர் நகர் மற்றும் நேதாஜ்நகர்,  ஆகிய இடத்தில் குடியிருந்து வரும் 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இவர்களை  தவிர கிராம சாலைகளிலும் வெள்ள நீர் மூழ்கடித்து செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் அறிந்த தளி சட்டமன்ற உறுப்பினர் டி ராமச்சந்திரன் அவர்கள் உடனடியாக சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.

 இதனை அடுத்து  சம்பந்தப்பட்ட துறைகளான  தீயணைப்பு பொதுப்பணி, வருவாய் , மின்சாரம்ஆகிய துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு சம்பவ இடத்திற்கு  வரவழைத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டஇடங்களுக்கு சென்றுஉடனடியாக சீர் செய்ய  நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

 இதில் கெலமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் வீட்டின் இருபுறமும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில்   வீட்டின் மூவர் வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர் அப்போது தேன்கனிக்கோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர்    மோகன்குமார் தலைமையிலான குழுவினர் உடனடியாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை பத்திரமாக மீட்டுபாதுகாப்பான இடத்தில் விட்டனர் இவர்களுடன் ராயக்கோட்டை கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் இருந்தனர். சட்டமன்ற உறுப்பினர் ஆய்வின் போதுகலந்து கொண்டவர்கள்கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவமூர்த்தி. ஜெயராமன், பேரூராட்சி செயலாளர். சுப்பிரமணி கெலமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் தேவராஜ், துப்புரவு மேற்பார்வையாளர் நாகேந்திரகுமார், மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

B.S. Prakash. Reporter