முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்த இரட்டை கக்கூஸ்....! வைரலாகும் புகைப்படம்....!!

 முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்த இரட்டை கக்கூஸ்....!  வைரலாகும் புகைப்படம்....!!

 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அலுவலக கட்டிடத்தில் ஒரே குளியலறையில் இரண்டு கமோட்கள் கட்டப்பட்டிருக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகத்திற்காக (SIPCOT) 1.80 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடம், ஒரே குளியலறையில் கட்டப்பட்ட இரண்டு கமோட்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் நகைச்சுவையாக மாறி உள்ளது.

 முடிக்கப்படாத கூரைகள், தரமற்ற சிமெண்ட் வேலைகள் மற்றும் குவிக்கப்பட்ட மரச்சாமான்கள்  ,ஆகியவற்றைப் பார்க்கும் போது காலக்கெடுவை பூர்த்தி செய்யும் வகையில், பணிகள் முடிந்ததாக அதிகாரிகள் காட்ட முயல்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அவசரப்பட்டு கட்டிடத்தை திறப்பதற்குஅதிகாரிகள் செய்த தில்லுமுல்லுகள் திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயரை உண்டாக்கியுள்ளது.