ஒசூரில் குடிசைமாற்று வாரியத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 30 பயணாளிகளுக்கு மாநகர மேயர் ஆணைகளை வழங்கினார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, இராயக்கோட்டை சாலையில் உள்ள குடிசை மாற்றுவாரிய கட்டிடத்தில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயணாளர்கள் குலுக்கல் முறையில் 30பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்
அவர்களுக்கான ஆணைகளை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் வழங்கினார்
அப்போது மாநகர துணை மேயர் ஆனந்தய்யா,மாநகர ஆணையாளர் பாலசுப்ரமணியன், வீட்டு வசதி வாரிய அலுவலர் மண்டலத் தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர் மல்லிகா தேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்..
E. V. Palaniyappan