1021 எம்.பி.பி.எஸ்.,களுக்கு அரசு வேலை......!
அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள, 1021 உதவி டாக்டர் பணியிடங்களுக்கு, எம்.பி.பி.எஸ்., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்' என, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியாமான எம்.ஆர்.பி., அறிவித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 1021 டாக்டர்களுடன், நர்ஸ்கள், மருந்தாளுனர்கள், மருத்துவ பணியாளர்கள் என, 4308 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த பணியிடங்கள் அனைத்தையும், எம்.ஆர்.பி., வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 889 மருந்தாளுனர்கள் நியமனத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.
தொடர்ந்து 1021 உதவி டாக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, எம்.ஆர்.பி., நேற்று வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: அரசு மருத்துவமனைகளில் 1021 உதவி டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
அதில் அனைத்து சமூக பிரிவுகளிலும் உள்ள மாற்றுத் திறனாளிகள் 74 இடங்கள் மற்றும் எஸ்.டி., பழங்குடியினர் பிரிவினருக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பணியிடங்களுக்கு,www.mrb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பம் துவங்கியது; அக்.25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
கணினி வழி எழுத்து தேர்வு, நவம்பரில் நடக்கும்; தேதி பின் அறிவிக்கப்படும். எஸ்.சி., - எஸ்.சி.ஏ., - எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 500 ரூபாய்; மற்றவர்களுக்கு 1000 ரூபாய் விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வயது வரம்பு, ஊதியம், 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கும் வழிமுறை உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.