கெலமங்கலத்தில் நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று அதிமுகவினர் கொண்டாட்டம்

 கெலமங்கலத்தில் நீதிமன்றத் தீர்ப்பை  வரவேற்று அதிமுகவினர் கொண்டாட்டம்.

*முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்*

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு எதிரான தடையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று நீக்கியது இதனை கொண்டாடும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் அதிமுக வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்,

இந்நிகழ்விற்கு மாவட்ட சிறுபான்மை செயலாளரும் கெலமங்கலம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான சையத் அசேன் தலைமை வகித்தார்.

ஒன்றிய செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார்

முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான முனிவெங்கடப்பா சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசும் பொழுது; புரட்சித் தலைவர் எம். ஜி.ஆர் வழியிலும் புரட்சித்தலைவி அம்மா வழியிலும் அரசியல் பயின்று பின்னர் அவர்கள் வழியிலே ஆட்சி நடத்தியவர் அதனால் தான் அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது என்றார்.

கெலமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் K.P. தேவராஜ்,முன்னாள் நகர செயலாளர் திம்மராயப்பா,நகர்மன்ற கவுன்சிலர்கள் சண்முகம்,ஜெயம்மாமற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு எடப்பாடி வாழ்க என கோசங்கள் எழுப்பினர்..

Thally Reporter. B.S. Prakash