பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஒசூர் எம்எல்ஏ, மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
ஒசூர் அடுத்த சமத்துவபுரத்தில் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி ஒசூர் எம்எல்ஏ, மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஒசூர் ஒன்றியம், நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பகுத்தறிவு பகலவன்,தந்தை பெரியாரின் 144வது பிறந்தநாளையொட்டி அவரது திரு உருவசிலைக்கு ஒசூர் எம்எல்ஏ Y.பிரகாஷ் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திமுக ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி அவர்களின் தலைமையில் சமத்துவத்தை வலியுறுத்தி 100க்கும் மேற்ப்பட்டோர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர், அப்போது மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ் அவர்கள் பெரியாரின் பிறந்தநாளையொட்டி உடல்உறுப்புக்களை தானமாக எழுதிவைத்தார்..
சமத்துவபுரம் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு புத்தாடைகள்,பொதுமக்களுக்கு உணவு,இனிப்புகள் வழங்கப்பட்டது..
இந்த நிகழ்வில் திமுக இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் P.S.சீனிவாசன், ஒன்றிய துணை செயலாளரும்,நல்லூர் ஊராட்சி மன்ற தலைவருமான வீரபத்திரப்பா, இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் கலைச்செழியன் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.
E. V. Palaniyappan. Hosur Reporter