போதை பொருள் மற்றும் போக்கு வரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம்

 போதை பொருள் மற்றும் போக்கு வரத்து விதிகள் குறித்து  விழிப்புணர்வு கருத்தரங்கம்

*போதை பொருள் மற்றும் போக்கு வரத்து விதிகள் குறித்து MGR கல்லூரியில் மாணவர்களுக்கு  நாட்டு நலப் பணி திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நாட்டுநலப்பணி திட்ட அமைப்பின் சார்பில் MGR கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது இன் நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் துறை சார்பில் போதை பொருள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இளைஞர்கள் தற்போது போதைப் பொருளுக்கு அதிகமாகவே அடிமையாகி வரும் இச்சூழலில் மேலும் சாலையில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் முன் எச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக MGR கல்லூரியில் மாணவர்களினிடையே நாட்டு நலப்பணி திட்ட அமைப்பு மற்றும்  ஓசூர் போக்குவரத்து காவல்துறை சார்பில் மாணவர்கள் போதை பொருட்களில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல் வாகனங்களை செலுத்த வேண்டும் மேலும் விபத்துக்கள் நடந்தபிறகு முதல் உதவி எவ்வாறு அளிக்கப்பட வேண்டும் என்பதை கூறித்து காணொலி மூலம் காண்பித்து நாட்டுநலப் பணி திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது,  

இன் நிகழ்ச்சிக்கு 200 க்கும்  மேற்ப்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நாட்டு நலப்பணி அமைப்பு, அமைப்பாளர் MGR கல்லுரி முதல்வர்  முனைவர் அ.ழுத்துமணி, திட்ட அலுவலர் லெனின்

ஓசூர்போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

B. S. Prakash