கட்சியில்,மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த (சசிகலா) நினைப்பவர்களின் எண்ணம் தோற்கடிக்கப்படும் - ஒசூரில் கே.பி.முனுசாமி பேட்டி

 கட்சியில்,மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த (சசிகலா) நினைப்பவர்களின் எண்ணம் தோற்கடிக்கப்படும் - ஒசூரில் கே.பி.முனுசாமி பேட்டி..


கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒசூர் மாநகராட்சி, மின்வாரிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உறையாற்றிய பின்பு அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்:

அப்போது திமுக எம்பி ஆ.ராசா குறித்த கேள்விக்கு:

ஆ.ராசாவின் பேச்சு பிறரின் மனதை புன்படுத்தும்படியாகவும்,பிறரின் உரிமையை பறிக்கும் வகையில் உள்ளது இதுமிகவும் கண்டிக்கத்தக்கது ஆ.ராசாவின் தலைவர் ஸ்டாலின் கண்டிக்காததால் தான் இபிஎஸ்

ஆ.ராசாவின் பேச்சு ஸ்டாலின் குடும்பத்திற்கும் பொருந்துமா என கேள்வி எழுப்பி உள்ளார்

பள்ளி குழந்தைகளுக்கான சிற்றுண்டி குறித்த கேள்விக்கு:

குழந்தைகளுக்கு உணவு அளிப்பது வரவேற்கலாம் ஆனால் ஆத்மார்த்தமாக இதனை செய்தாரா என்றால் இல்லை,

அவர் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் தான் எங்களுக்கு வர வேண்டிய வாக்குகள் மாறி முதல்வரானார் அவர்களை ஏமாற்றிவிட்டு நானும் செய்கிறேன் என அறிமுகப்படுத்தி இருக்கிறார்

MGR மாணவர்களுக்கு சத்துணவு வழங்கியபோது கருணாநிதி, பிள்ளைகளை தட்டு ஏந்த வைத்துள்ளார் MGR என்றார்..

தட்டு ஏந்த வைத்தார் எனக்கூறியவரின் மகனே MGR திட்டத்தின்படி சிற்றுண்டி வழங்கி விளம்பரப்படுத்தி கொண்டுள்ளார்.. இப்போதும் நாங்கள் தான் அவர்களுக்கு உதவியாக உள்ளோம்

அதிமுக தலைமை ஏற்பேன் என்ற சசிகலா பேச்சு குறித்து:

அம்மாவிற்கு பிறகு, எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற்றுவிடுவார்கள் என்கிற ஆதங்கத்திங் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுவார்கள் என கங்கனம் கட்டிக்கொண்டுள்ள ஒரு கூட்டம் தூண்டுதலின் பேரில் குழப்பத்தை ஏற்ப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்

இதுப்போன்ற குழப்பத்தை ஏற்ப்படுத்த நினைக்கும் முயற்சி தேற்கடிக்கப்படும் என்றார்

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் மாநகராட்சியின் 3 வது மண்டல குழு தலைவர் ஜெய் பிரகாஷ், 4 வது மண்டல குழு தலைவர் புருஷோத்தம ரெட்டி, ஓசூர் மாநகராட்சியின் கல்விக் குழு தலைவர் ஸ்ரீதரன், ஓசூர் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் நாராயணன்,ஓசூர் ஒன்றிய குழு தலைவர் சசி வெங்கடசாமி,துணை தலைவர் நாராயணசாமி,ஓசூர் மாநகர பகுதி கழக செயலாளர்கள் ராஜு, அசோகரெட்டி, வாசுதேவன், மஞ்சுநாத், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஷ்,பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஒன்றிய செயலாளருமான சிவி ராஜேந்திரன், ஓசூர் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் சங்கர், ரஜினிகாந்த், சிவராமன்,மாவட்ட கழகத் துணைச் செயலாளர் மதன், மாவட்ட பொருளாளர் கந்தன்,வட்ட செயலாளர் சிவகுமார், கும்மி என்கின்ற ஹேம குமார் ,ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி, ரவிக்குமார், சைலேஷ் கிருஷ்ணன், கிருஷ்ணன், பாபு என்கின்ற வெங்கடாசலம் ஜெய்பால் கணேஷ் ஜாகீர் , சார்பு அணி மாவட்ட கழக செயலாளர்  ராமு,மாதையன் , வெற்றிச்செல்வன்,சீனிவாசன்,சென்ன கிருஷ்ணன், மாதேஸ்வரன், தூய மணி, ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி, அருண், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் ரெட்டி,ஒன்றிய துணை செயலாளர்கள் நவீன் ரமேஷ், வட்ட செயலாளர் சிவகுமார்,நாராயண ரெட்டி, நந்தகுமார், முரளி, சந்திரன், மாதேஸ்வரன்,ரகுமான், குணசேகரன், ராஜு பாய், இம்ரான் பாஷா,சாக்கப்பா, நடராஜன், பாலுசாமி, மற்றும் சார்பு அணி மாவட்ட ஒன்றிய மாநகர கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் என மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan