நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, ஒசூர் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் பலம் எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அவர்களுக்கு 99% உள்ளநிலையில்
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓபிஎஸ் அவர்கள் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழுவிற்கு தடை விதித்ததால் பழைய பொறுப்புகளிலேயே அனைவரும் தொடர்வார்கள், இடைகால பொதுசெயலாளர் பதவி செல்லாது என தீர்ப்பளித்திருந்தார்.
இபிஎஸ் மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பளித்த 2 பேர் கொண்ட நீதிபதி அமர்வு:பொதுக்குழு செல்லும் எனவும், பொதுசெயலாளர் பதவியும் செல்லும் என்றார்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சியில் உள்ள அதிமுகவின் கிருஷ்ணகிரி மேற்கு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களின் தலைமையிலான அதிமுகவினர் பொதுக்குழு செல்லும் என்கிற நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்,
இந்த நிகழ்ச்சியில் ஓசூர் பகுதி கழக செயலாளர்கள் அசோக ரெட்டி(நகரமைப்புக்குழு தலைவர்) ராஜா என்கிற ராஜீ ,வாசுதேவன், மஞ்சுநாத் ஒசூர் ஒன்றிய கழக செயலாளர்கள் ஹரிஷ் ரெட்டி, ரவிக்குமார்(மாவட்ட கவுன்சிலர்), எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளரும், ஓசூர் மாநகர 4வது மண்டல குழு தலைவருமான ஜெயப்பிரகாஷ், ஓசூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி சசி வெங்கடசாமி,முன்னாள் மாநகர கழக செயலாளர் மாநகர எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், ஓசூர் மாநகராட்சியின் கல்வி குழு தலைவர் ஸ்ரீதர்,ஓசூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் குபேரன் என்கிற சங்கர்,லக்ஷ்மி கும்மி ஹேமகுமார், திருமதி தில்ஷாத் முஜிப்பூர் ரஹ்மான, ஓசூர் ஒன்றிய குழு உறுப்பினர் முரளி,
சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் சிட்டி ஜெகதீஷ், சென்ன கிருஷ்ணன், சந்திரன், நாராயண ரெட்டி,பிரசாத், ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அருண், ஓசூர் முன்னாள் நகர மன்ற உறுப்பினர்கள் நாராயண ரெட்டி ஹரி பிரசாத் நந்தகுமார், சீனிவாசன், இம்ரான் பாஷா, கழக மகளிர் அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Hosur Reporter. E.V. Palaniyappan