சின்னட்டி கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை

சின்னட்டி கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை.

கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள சின்னட்டி கிராமத்தில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் வளர்ச்சிப் பணிக்கான பூமி பூஜை ஒன்றிய கவுன்சிலர் பிரபா ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தளி சட்டமன்ற உறுப்பினரும் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழு தலைவருமான        டி.ராமச்சந்திரன் அவர்கள்  பூமி பூஜையை தொடங்கி வைத்து பேசியதாவது இந்த கிராம மக்கள் நீண்ட நாள் வைத்த கோரிக்கையான கொடிகி ஜெம்பு கான் ஏரியின் மறுக்கால் (கோடி) உடைந்து பல ஆண்டுகளாக காணப்படுகிறது .இதனை சீரமைக்க உடனடியாக சம்பந்தப்பட்ட துறையை அணுகி நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். 45 என் கொண்ட அரசு பேருந்து கெலமங்கலத்தில் இருந்து ஒன்ன குறிக்கை சென்று மீண்டும் கெலமங்கலம் வந்து ஓசூர் செல்கிறது    இந்த வழித்தடத்தை மாற்றி கெலமங்கலம் சின்னட்டி , தாவரக் கரை வழியாக ஒன்னு குறிக்கை சென்று மீண்டும் கெலமங்கலம் வந்தடைய வேண்டும் என சின்னட்டி கிராம மக்கள் வைத்த கோரிக்கையை சம்மந்தப்பட்ட துறையை அனுகி நிறைவேற்ற தரப்படும் என உறுதி அளித்தார்.   இந்நிகழ்ச்சியில் ஜெக்கே ரி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஷ்குமார்,ஒன்றிய கவுன்சிலர் கங்காதர்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்  முனுசாமி,சிவக்குமார்,முருகன், ஊர் கவுண்டர்கள், மற்றும் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

B. S. Prakash