தேன்கனிக்கோட்டையில் தனியார் கல்லூரி பேருந்து சிறைபிடிப்பு

தேன்கனிக்கோட்டையில் தனியார் கல்லூரி பேருந்து சிறைபிடிப்பு



கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லுாரிகளுக்கு தேன்கனிக்கோட்டை, அந்தேவனப்பள்ளி, குந்துக்கோட்டை, பென்னங்கூர், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும் 3 தனியார் கல்லூரி பேருந்துகளில் மாணவ மாணவிகள் சென்று வந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் ஒரு பஸ் நிறுத்தப்பட்டது. அதனால் தற்போது ஒரு பஸ்சில் 120 மாணவர்களும் மற்றொரு பஸ்சில் 70 மாணவியரும் செல்ல வேண்டியுள்ளது. 120 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஒரே பஸ்சில் செல்வதால் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் படிக்கட்டுகளில் உயிருக்கு ஆபத்தான முறையில் தினந்தோறும் மாணவர்கள் தொங்கியபடி செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேன்கனிக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவர்கள் தங்களுக்கு கல்லூரி நிர்வாகம் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் எனக்கூறி 2 பேருந்துகளை சிறைபிடித்து நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தேன்கனிக்கோட்டை போலீசார் அப்பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் போலீசார் தெரிவித்த போது, நாளை முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதனையடுத்து கல்லூரி மாணவர்கள் அங்கிருந்து கலைந்து பேருந்துகள் மூலம் கல்லூரிக்கு சென்றனர்.

Thally Reporter. B.S. Prakash