தனியார் பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்க அனுமதிக்க வேண்டும்; தமிழக முதல்வருக்கு கே. ஆர். நந்தகுமார் கோரிக்கை....

 தனியார்  பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்க அனுமதிக்க வேண்டும்;    தமிழக முதல்வருக்கு கே. ஆர். நந்தகுமார் கோரிக்கை....

தனியார் சுயநிதி நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல் நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சனிக்கிழமை பள்ளிளை நடத்துவது சம்பந்தமாக கோரிக்கை மனுவினை தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் K.R.நந்தகுமார் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ளார். 

அதில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள்  வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளி வேலை நாட்களாக செயல்பட்டு வந்தது.. அதனால் எந்தவித பிரச்சனையும் எங்கும் ஏற்படுவதில்லை. இரண்டாம் சனிக்கிழமை தவிர இதர  சனிக்கிழமைகளில் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்காக  சுயநிதி அடிப்படையில் இயங்கும் பல்லாயிரக்கணக்கான நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்கி வந்தன.

 குளிர்காலம் மழைக்காலம் கொரோனா காலம் என எப்பொழுது விடுமுறை வரும் என்று தெரியாத சூழ்நிலையில் வாய்ப்பு கிடைத்த போது பாடங்களை நடத்தி முடித்தாக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன..

 பாடங்களை நடத்தாவிட்டால் பெற்றோர்கள் கேள்வி கேட்பார்கள். தேர்விலே கேள்விகள் வந்து மாணவன் கேள்விக்கான   பதிலளிக்கவில்லை என்றால் ஆசிரியர் பாடம் நடத்தவில்லை என்ற அவப்பெயர் ஆசிரியர்களுக்கு ஏற்படும். மாணவனை எதிர்கால வாழ்வில் விளையாட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் வேண்டுகின்றோம் சனிக்கிழமை பள்ளிகளை நடத்த தடை போட வேண்டாம்.

 சுயநிதி அடிப்படையிலேயே இயங்கும் எமது தனியார் பள்ளிகள்  சனிக்கிழமை பள்ளிகளை நடத்துவதற்கு அரசிடம் இருந்து எந்த நிதி உதவியும் நாங்கள் எப்பொழுதும் எக்காலத்திலும் கேட்டதில்லை.

 சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டம்  அதிக பாடங்கள் கட்டாயம் நடத்திய தீர வேண்டிய காலகட்டம் என்பதாலும், தேர்வுகள் நெருங்கி வருவதால்....

பல்வேறு மாதாந்திர தேர்வுகள் திருப்புதல் தேர்வுகள் மாதிரி தேர்வுகள் காலாண்டு தேர்வுகள் அரையாண்டு தேர்வுகள்

முழுஆண்டு தேர்வுகள் நடத்தி அச்சம் தவிர்த்து அனைத்து தேர்வுகளிலும் பங்கு கொள்ளும் வண்ணம் மாணவர்களை படிக்க வைத்து நல்ல மதிப்பெண்கள் பெற வைக்க வேண்டிய இந்த போட்டி யுகத்தில் சனிக்கிழமை பள்ளிகள் நடத்தினால் மட்டும்தான் இது எல்லாம் சாத்தியப்படும் என்பதால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் சனிக்கிழமைகளில் மாணவர்களின் பெற்றோர்களின்  விருப்பத்திற்கு  இணங்க பள்ளிகளை நடத்தி வருகிறார்கள்..

 இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக சனிக்கிழமை பள்ளிகள் நடத்தக்கூடாது என்று பல்வேறு ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

 ஆனால் அதற்கான  அரசாணை ஏதும் வந்த மாதிரி தெரியவில்லை.

 அரசின் சார்பாக தனியார் பள்ளிகள் சனிக்கிழமை செயல்படக் கூடாது என்று எந்த அரசாணையும் இல்லை என்று நம்புகின்றோம்.

 தனியார் பள்ளிகளுக்கு எதிரான ஊடகங்களின்  பொய் பிரச்சாரம் காரணமாக

 சில சமூக விரோதிகள் தனியார்  பள்ளி நிர்வாகிகளையும் மாவட்ட கல்வி அதிகாரிகளையும் மிரட்டி வருகிறார்கள்.

 கடலூர் மாவட்டக் கல்வி அலுவலர் உண்மை நிலை தெரியாமல் பள்ளி நிர்வாகிகளை மிரட்டி ரூபாய் 2 லட்சம் வரை அபராதம் விதிப்பதாக பள்ளி நிர்வாகிகளை மிரட்டி வருகிறார்.

 எனவே தயவுசெய்து தனியார் பள்ளிகள்  கல்வி கற்பிப்பதற்கு இடையூறாக இல்லாமல்...

அரசு பள்ளிகள் செயல்படவில்லை என்பதற்காக தனியார் பள்ளிகளும் செயல்படக்கூடாது என்கிற தவறான எண்ணத்தை கைவிட்டு தனியார் பள்ளிகள்  விருப்பம் போல் சனிக்கிழமை பள்ளிகளை நடத்த எந்தவித மிரட்டல்களையும் முதன்மை கல்வி அதிகாரிகளும், மாவட்ட கல்வி  அதிகாரிகளும் செய்யாமல்... அனைவருக்கும் தரமான தொடர்கல்வி  கிடைக்க ஆவண செய்ய வேண்டுமாய் தமிழ்நாடு நர்சரி பிரைமரி  மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு வேண்டுகிறோம் என்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் K.R.நந்தகுமார் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.