மோடியின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் திமுக எம்.பி..,! கடுப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!?

மோடியின் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் திமுக எம்.பி..,!  கடுப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின்..!?

 இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பச்சமுத்து. இவரது தலைமையின் கீழ் இயங்கும் ஐஜேகே, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஐஜேகே கட்சிக்கு பெரம்பலூர் தொகுதி ஒதுக்கப்பட்டு இருந்த நிலையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட பச்சமுத்து வெற்றி பெற்று தற்போது எம்பியாக இருக்கிறார். 

எம்.பி ஆனதற்கு பிறகு பச்சமுத்து தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என்கிற பேச்சு பரவலாக எழுந்தது. அதனை ஈடு செய்யும் விதமாக இந்த ஆண்டும் தனது தொகுதியை சேர்ந்த 300 மாணவர்களுக்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்க வாய்ப்பு வழங்குவதாக கூறி, இருப்பை தக்கவைத்துக்கொண்டார்.

திமுக கூட்டணியில் இருந்து பச்சமுத்து வெளியேறிவிட்டாலும் மக்களவை உள்பட அதிமுக்கியமான மேலிடத்து அலுவலகங்களில் இன்னமும் திமுக எம்.பியாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் திமுக எம்.பி பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, ‘ ஒருவர் விரும்பினாலும் விரும்பாமல் போனாலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும். 5 வயது வளையாத குழந்தை 50 வயதில் வளையாது என்பதால் குழந்தைகளை ஆரம்ப கல்வி முதல் படிப்பதற்கும், தேர்வுக்குரிய பயிற்சிகளுக்கும் தயார் செய்வது அவசியமான ஒன்று. 

வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் இந்தியாவிற்குள் வருவதால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழ்நாடு வளர்ந்த மாநிலம், என்று சொல்வது எல்லாம் உண்மை இல்லை.

நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய கல்விக்கொள்கை எதிர்ப்பு இது அனைத்துக்கும் அரசியல் தான் காரணம். 

தமிழக மாணவர்கள் உலகளாவிய போட்டியை எதிர்கொண்டு திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தரமான முறையில் பயிற்சி அளிக்க வேண்டும். ஆசிரியர்கள் நடத்துவதை சோதித்து பார்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் புதிய கல்வி கொள்கையில் அனைத்து அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

 ஆனால், புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பதற்கு அரசியல் தான் காரணம். நீட் தேர்வில் இந்திய அளவில் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதிக்கின்றனர். ஆனால் இதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய காரணம் அரசியல் தான்.

தமிழ்நாட்டில் கல்வித் துறையின் செயல்பாடுகள் சரியில்லை. சுத்த வேஸ்ட். பள்ளிகளில் வகுப்பறை இல்லாமல், மரத்தடியில் படிக்கும் அவல நிலை உள்ளது. அரசு கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகளே இல்லை என சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.

 இவ்வாறாக வெளியுலகுக்கு திமுக எம்.பியாக பச்சமுத்து இருந்தாலும் உண்மையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளதாகவே கூறப்படுகிறது. 

ஆனாலும் கூட்டணி தர்மத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து பச்சமுத்து பேசி வருவது திமுக மேலிடத்தை குறிப்பாக முதல்வர் ஸ்டாலினை ரொம்பவே டென்ஷன் ஆக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.