ஒசூரில் புதிய சிறப்பு மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக திறப்பு

 ஒசூரில் புதிய சிறப்பு மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக திறப்பு..


ஒசூரில் உள்ள தலைமை மருத்துவமனையில் புதியதாக கட்டப்பட்டிருந்த புதிய சிறப்பு மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை முதல்வர் காணொளி வாயிலாக திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் 10 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டிருந்த புதிய சிறப்பு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்..

மூன்று மாடி கட்டிடங்களை கொண்ட கட்டிட வளாகத்தில் தரைத்தளத்தில் பிரசவ அறை, உயர் சிகிச்சை பிரிவு, கவனிப்பு அறை,ஆய்வகம் மற்றும் புற நோயாளிகள் பிரிவு வசதியும்

முதல் தளத்தில் பிரசவத்திற்கு முன்பு கவனிப்பாறை அறுவை சிகிச்சை பின் கவணிப்பு அறையும்

இரண்டாம் தளத்தில் இரு அறுவை சிகிச்சை அரங்கம்,மற்றும் நோயாளிகள் கவனிப்பு அறை

மூன்றாம் தளத்தில் குழந்தைகள் வார்டு மருத்துவர் அறை செவிலியர் அறை என பல்நோக்கு சிகிச்சை பெறும் வசதியுடன் தனியார் மருத்துவமனைக்கு இணையாக உயர்தர வசதியுடன் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு , செல்லக் குமார் எம்பி, ஒசூர் எம்எல்ஏ பிரகாஷ்,மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் மருத்துவ இணை இயக்குனர் பரமசிவம் ஆகியோர் மருத்துவமனை கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்,நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Popular posts
தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு....! தனியார் பள்ளிகள் சங்க மாநில செயலாளர் K.R.நந்தகுமார் அறிவிப்பு...
படம்
பத்திரிகையாளர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்க தாமதம், விரைவாக வழங்க மனு அளித்த ஜனநாயக அனைத்து பத்திரிகை உறவுகள் பாதுகாப்பு நல சங்கம் - தமிழ்நாடு, நிர்வாகிகள்.
படம்
நட்சத்திர தொகுதியாக மாறிவிட்ட தர்மபுரி....! அம்மாவுக்காக மகள்கள் செய்யும் பிரச்சாரம்....!!
படம்
குழந்தைக்கு ரோலக்ஸ் என்றா பெயர் வைப்பது....?” - அண்ணாமலை விமர்சனம்
படம்
தனியார் பள்ளிகள் இயக்குனருக்கு வரவேற்பு
படம்