ஓசூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

 ஓசூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு


தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தமிழகம் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஊறுமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜெய்சந்திரபானுரெட்டி தலைமையில் உறுதிமொழி வாசிக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர் நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர் காந்தி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு யாரும் அடிபணியக் கூடாது என தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதேபோல மாணவ செல்வங்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், துணை மேயர் ஆனந்தய்யா, பெற்றோர் ஆசிரியர்கழகதலைவர் செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள்,ஆசிரியர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan