அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் நூதன ஆலய மகா கும்பாபிஷேகம்

 அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் நூதன  ஆலய மகா கும்பாபிஷேகம்



கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகிலுள்ள ஆணை கொள்ளும் ஊராட்சிக்குட்பட்ட குட்டூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் நூதன  ஆலய மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

 காலை முதலே வேத பண்டிதர்கள் வைத்துக்கொண்டு வேதங்கள் ஹோமங்கள் கணபதி ஹோமம். வாஸ்து சாஸ்திரம்  பிரவேச பலி. ரக்ஷா பந்தன் ஒருநாள் வத்தி என்று பல வேத மந்திரங்கள். கணபதி பூஜை அதற்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது அதற்கு பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம். பன்னீர் அபிஷேகம். அம்மனுக்கு மலர் அலங்காரம்  அலங்காரம் செய்து அம்மனுக்கு திஷ்டி வைத்து அதற்குப் பிறகு மகா மங்கள ஆரத்தி ஆரத்தி எடுத்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது .

 இக் கோயில் கும்பாபிஷேக விழாவை ஊர் கவுண்டர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் தாய்மார்கள் ஒன்றுகூடி ஏற்பாடுகளை  மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளங்கள் . வாணவேடிக்கைகள். இந்த விழாவில் தளி சட்டமன்ற உறுப்பினர் டி .ராமச் சந்திரன் உள்ளாட்சித் தலைவர்கள் .கவுன்சிலர்கள் .வார்டு உறுப்பினர்கள் .முன்னாள் கவுன்சிலர்கள் .முன்னாள் சேர்மன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரமுகர்கள் சுற்றுப்புற கிராம பொதுமக்கள் பல்வேறு கிராம தலைவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றார்.

 இந்த விழா ஏற்பாடுகளை ஊர் கவுண்டர்கள் கோயில் கமிட்டி உறுப்பினர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் தாய்மார்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.