முஹம்மது சதக்தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி !

 முஹம்மது சதக்தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி !

ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள முஹம்மது சதக்தஸ்தகீர் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது!!!

மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் கண்காட்சியை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர்களாக முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மண்டபம் கல்வி மாவட்ட அலுவலர் முருகம்மாள், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இக்கண்காட்சி 11.8.22,12.8. 22 இரண்டு நாட்கள் நடைபெற்றது. இக்கண்காட்சியில் பலவகையான கருவிகளை பள்ளி மாணவர்கள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர். இதில் தூக்குப்பாலம், ஏவுகணை, தொலைநோக்கு கருவி, உலக உருண்டை, நீர்சுழற்சி முறையில் மின்சாரம் தயாரித்தல், நோயாளிகள் குறித்த நேரத்தில் மருந்துகள் சாப்பிடுவதற்கு நினைவூட்டும் கருவி களை,மாணவ மாணவிகள் திறம்பட செய்திருந்தனர். இதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக ராமகிருஷ்ணன், கோடீஸ்வரி,தேவி, புவனேஸ்வரி, திலகவதி,ஹேமாவதி ஆகியோர் செய்திருந்தனர். மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு இக்கண்காட்சியை சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி