ஒசூர் உழவர் சந்தையில் மருத்துவ முகாம்

 ஒசூர் உழவர் சந்தையில் மருத்துவ முகாம்


 ஒசூர் உழவர் சந்தையில் மருத்துவ முகாமை துவக்கி வைத்த மாநகர மேயர்: விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, தாலூகா அலுவலக சாலையில் உள்ள உழவர் சந்தையில், விவசாயிகள் வியாபாரிகள் பயனடையும் வகையில்

இலவச மருத்துவ முகாமினை ஒசூர் மாநகர மேயர் S.A.சத்யா அவர்கள் துவக்கி வைத்த பின்பு, வியாபாரிகள் பொதுமக்களிடம் உழவர் சந்தை குறித்து குறைகளை கேட்டறிந்தார்

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்  மோசின் தாஜ் நிசார், பகுதி செயலாளர் ராமு, மாநகர கழக நிர்வாகிகள் செந்தில்குமார், சு.முருகன், சக்திவேல், குமார், மணி, சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Hosur Reporter. E.V. Palaniyappan