தேசியக்கொடியும் - கனிமொழியும்; இதில் கூட அக்கப்போரா...?!
தேசியக் கொடியை ஏற்றுமாறு யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
75 ஆவது சுதந்திர தினம் வரும் நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. வைர விழா என்பதால் இந்த ஆண்டு இந்த விழா கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு சுதந்திரனம் தினம் ஆசாதி கா அம்ரித் மகாஉத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது.
அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது மொட்டை மாடியிலோ இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசியக் கொடியை ஏற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசியக் கொடி விற்பனை அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 1 கோடி வீடுகளுக்கு தமிழக பாஜக சார்பில் தேசியக் கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அக்கட்சி சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்வதற்காக பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின பேச்சு போட்டி, சைக்கிள் பேரணி, நடைபயணம் போன்ற நிகழ்ச்சிகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அது போல் சமூகவலைதளங்களின் முகப்பில் தேசியக் கொடியை அனைவரும் வைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதையொட்டி ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தின் முகப்பை தேசியக்கொடியாக மாற்றினார். அவரை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் தோனியும் தனது ட்விட்டர் முகப்பை மாற்றியுள்ளார்.
மேலும் ரஜினிகாந்த் தனது வீட்டில் தேசிய கொடி ஏற்றியுள்ளார்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் தேசியக் கொடியை ஏற்றுமாறு யாரும் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.
இது தேசப்பற்று சார்ந்த விஷயம். அவரவரே இதை செய்வார்கள். என கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முதல் தமிழகமெங்கும் பல்வேறு வீடுகளிலும் அவர்களின் தொழில் நிறுவனங்களிலும் பலர் மனமுவந்து தங்களின் தேசப் பற்றை வெளிப்படுத்தும் விதமாக அவர்களின் இல்லங்களில் மேல் தேசிய கொடியை ஏற்றி தேசபக்தியை வெளிக் காட்டி வருகின்றனர்.
ஆனால் எந்த திமுகவினரின் வீடுகளிலும் அவர்களின் கூட்டணியை சார்ந்தவர்கள் வீடுகளிலும் ஒரு கொடி கூட ஏற்ற படாமல் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இதில் நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்கிற மனப்போக்கு தான் நிலவுகின்றது.
ஆனால் நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காரின் மீது ஒரு பெண் காலனி வீசியதை வேறுவிதமாக திசைதிருப்பி கொண்டுள்ளனர். தேசியக்கொடியுடன் வந்த காரின் மீது செருப்பு வீசலாமா இதுதான் தேசபக்தியா என்றெல்லாம் விமர்சனம் செய்து வருகிறது.
இதில் எதை நாம் எப்படி எடுத்துக்கொள்வது எல்லாமே அரசியலா போச்சு...!?