கள்ளக்குறிச்சி வாட்ஸ்அப் அட்மின்களை தேடும் காவல்துறை,
வன்முறை சின்னசேலம் அடுத்த கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதியின் சாவுக்கு நீதி கேட்டு கடந்த 17-ந்தேதி பள்ளி முன்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது...
வலைவீச்சு மேலும் இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு அவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்று கலவரத்துக்கு காரணமானவர்களை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் குழு மூலம் கலவரத்தை ஏற்படுத்த உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த 2 அட்மின்கள் உள்பட 17 பேர் காரணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கலவரத்துக்கு காரணமாக இருந்த அந்த 17 பேரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி தலைமையிலான போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்...
Kalkakkurichi Reporter. G. Murugan