மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 130 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள்

 மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில்  130 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் 

ஒசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 130 மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட செயலாளர் திரு.ஒய்.பிரகாஷ்MLA, அவர்களும் ஓசூர் மாநகர மேயர் திரு.எஸ்.ஏ.சத்யாEx.MLA இணைந்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணை செயலாளர் தனலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், பகுதி செயலாளர்கள் ராமு, திம்மராஜ், மாநகர நிர்வாகிகள் செந்தில்குமார், கோபாலகிருஷ்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் எல்லாராமணி, சீனிவாசன், ராஜா,  முனிரத்தினம்மா, மாமன்ற உறுப்பினர் மஞ்சுளா முன்ராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் முன்ராஜ், கேஜி பிரகாஷ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுமன், மாவட்ட கல்வி அலுவலர் முனிராஜ், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், கழகத் தோழர்கள், பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Hosur Reporter. E. V. Palaniyappan