பள்ளி மாணவர்கள் அனைவரும் கட்டாயம் Mask அணிய வேண்டும் கல்வித்துறை உத்தரவு
அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, மாணவா்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் பள்ளிகளில் மீண்டும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதையும், தடுப்பூசி செலுத்தியிருப்பதையும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றுவதையும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்துகொள்வதையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி வாயில்களில் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், யாருக்கேனும் உடல் வெப்பநிலை அதிகமாக பதிவானால் அவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.