லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்கள் கைது

 லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவர்கள் கைது


விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர், திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் பெரியசெவலை கூட்டு ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று ஒருவரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில் அவா் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இம்ரான்கான்(வயது 76) என்பதும், தப்பி ஓடியவர்கள் பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த ஜான்பாஷா (45), சரவணம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாயவன் (76) ஆகியோர் என்பதும், இவர்கள் 3 பேரும் சேர்ந்து லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து இம்ரான்கானை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய ஜான்பாஷா, மாயவன் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். மேலும் இம்ரான்கானிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் ரூ.25 ஆயிரம் ரொக்கம், 2 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Kalkakkurichi Reporter. G. Murugan

Popular posts
கிருஷ்ணகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் ஆசிரியர்கள் 3 பேர் கைது.
படம்
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்
படம்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மீண்டும் வாய்ப்பு...!
படம்
தனியார் பள்ளிகளை சிறப்பு வகுப்புகள் நடத்தாதே என்று சொல்லிவிட்டு அரசு பள்ளிகள் மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்துவது என்ன நியாயம்.,?
படம்
புற்று ஈசல்கள் போல் பெருகிவரும் Play Schools வரைமுறையின்றி தொடங்கப்படுவது தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: தனியார் பள்ளிகள் சங்கம் கோரிக்கை..!
படம்