பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம்!!

 பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாபெரும் போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு மாவட்ட செயலாளர் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சந்தானதாஸ், பொதுக்குழு உறுப்பினர் சகுபர் சாதிக், செயற்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களான தடுத்து நிறுத்து தடுத்து நிறுத்து போதைப் பொருட்களை விற்பனை தடுத்து நிறுத்து போதை பொருட்களின் விற்பனையை தடுத்து நிறுத்து தெரிகிறதா தெரிகிறதா இளைஞர்கள் சக்தி போதைக்கு அடிமையாகி சீரழிந்து போவது தெரிகிறதா பள்ளிக்கூட வாசல்களில் போதைப் பொருள்கள் கிடைக்கிறது கைக்கு எட்டிய போதை பொருளால் மாணவச் சமூகம் அழிகிறது உள்ளிட்ட போதை பொருட்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர் M.N.அன்வர் அலி